முடிவில்லா தேடல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி தேடி.....சில சமயம் நானாகி, சில சமயம் வீணாகி, அந்த வளர் சிதை மாற்றங்களின் வார்த்தைகள் வடிவம் தான் இங்கே.........

நான் - கடவுள்


இவர் தான் "ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்". எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை.


என் பதிவின் தலைப்பு இவர் அருளிய புத்தகத்தின் தலைப்பு தான்.


"கடவுளை தவிர வேறொரு பொருள் இல்லாததால், வேறொரு பொருள் ஒன்று இருந்து அதை எடுத்து, கடவுள் எல்லாவற்றையும் படைத்தான் என்பதில்லை. எல்லாமாக (பரிணமித்திருப்பதே) விரிந்திருப்பதே கடவுள்.
-- "ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்"


மகானின் வாழ்க்கை வரலாறு (சுருக்கமாக) :

மகான் ஒரு வசதியான இஸ்லாமிய குடும்பத்தில் மே 2, 1900 ம் ஆண்டு இராமனாதபுரம் மாவட்டத்தில், வில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள குஞ்ஜாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். பிள்ளை பருவத்தில் பள்ளிக்கு அவர் செல்லவில்லை. எனினும் அவர் புத்தி கூர்மையுடனும் கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.


சிறு வயது முதலே அவர் வாழ்க்கையின் உண்மையை அறிவதில் மிக்க ஆர்வமாக இருந்தார்.அதற்காக அவர் பல்வேறு வழிபாடுகளையும் சமய சடங்குகளையும் தீவிரமாக மிகுந்த வேட்கையோடு செய்து வந்தார். அப்போது அவருக்கு அவர் ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு குருவினால் உபதேசம் செய்து வைக்கப்படுவதைப் போல கனவு கன்டார் (19 ஆகஸ்டு 1930 ). அந்த கனவு எட்டே கால் வருடங்கள் கழித்து அவர் ஊரை விட்டு 1400 மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தேறியது ஒரு இம்மியும் பிசகாமல் கனவில் வந்ததை போலவே.

அவருக்கு 16 வயது இருக்கும் போது அவர் இரங்கூன் பயனமானார். அவர் மாமாவுடன் சிறிது காலம் வேலை செய்து விட்டு, 1933ல் சொந்தமாக தொழில் துவங்கினார். அப்போதும் கூட அவர் மனித வாழ்வின் ரகசியங்களை அறிந்து கொள்ள பல யோகிகளையும், புத்த சந்நியாசிக்களையும் சந்தித்து கொண்டுதான் இருந்தார்.

1938 ஜனவரி 7ம் நாள் மகான் அவரின் குரு கரிபுல்லா கமில் சைஈது இப்ராகிமை சந்தித்தார். ஆவர் மூலம் தாந்ரீக யோகத்தில் உபதேசம் பெற்றார். அது முதல் அவரிடம் ஒரு பெரிய மாறுதல் தெரிய ஆரம்பித்து விட்டது. அவர் மேலும் அதிக நேரம் தியானத்திலும், உள் முக ஆராய்ச்சியிலும் ஈடுபட ஆரம்பித்தார். மிக குறுகிய காலத்திலேயே "ஞானம்" கிடைக்கப் பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவரின் குருவுக்கே இவரிடம் நடக்கும் மாற்றங்கள் புரியவில்லை.

அவரின் திடீர் மாற்றத்தை பார்த்த ஒரு பெரியவர் இவரை பார்த்து "என்ன! குரு மாதிரி பிரகாசமாக இருக்கிறீர்கள்" எனவும், மகா "ஆமாம். இன்றிலிருந்து நான் ஒரு பெரிய குரு தான்" என்று அன்று முதல் வியாபாரத்தை விட்டு விட்டார்.

அதன் பின், 1939ம் ஆண்டு இந்தியா வந்து மதுரையில் தன் சேவையை துவங்கினார். ஏழை எளிய மக்கள் என்று பாராமல் அனைவருக்கும் ஞானத்தை வாரி வழங்கியதால் ஞான வள்ளல் என பெயர் பெற்றார்.

"நடந்ததெல்லாம் பெரும் நன்மைக்கே. சந்தோசம்" -- ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்

------ மகானின் வரலாறு தொடரும் -------


பி.கு : இவரிடம் தான் "வேதாத்ரி மகரிஷி" உபதேசம் பெற்றார் எனவும் வேதாத்ரி மகரிசியின் குண்டலினி தீட்சை முறைகளும் இவரின் குண்டலினி முறையை ஒட்டியது தான் என அறிகிறேன்.

1 மறுமொழிகள்:

Blogger தம்பி மொழிந்தது...

//என் பதிவின் தலைப்பு இவர் அருளிய புத்தகத்தின் தலைப்பு தான்.//

உண்மைதான். வாழ்க்கையே ஒரு தேடல்தானே.

மகானின் தகவல்களுக்கு மிகவும் நன்றி.

என் வலைப்பூவில் ஒரு மகானை பற்றீய பதிவை இட்டிருக்கிறேன். ஆனால் யாரென்று சொல்லவில்லை.
நீங்களும் முயற்சி செய்யலாம்.

அன்புடன்
தம்பி

 

Post a Comment

<< முகப்பு