முடிவில்லா தேடல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி தேடி.....சில சமயம் நானாகி, சில சமயம் வீணாகி, அந்த வளர் சிதை மாற்றங்களின் வார்த்தைகள் வடிவம் தான் இங்கே.........

தடைபடா வர்த்தக பாதுகாப்பு திட்டமிடுதல் (Business Continuity Planning)

இன்று உலகம் முழுதும் பரவலாக தீவிரவாதம் பரவி இருக்கின்ற வேளையில், அதனால் ஏற்படும் விளைவுகள் எல்லோரையும் பாதிப்பது கண்ட உண்மை. (உம்). இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு. அதன் எதிரொலியாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள்.

பல்வேறு நிறுவனங்கள் இதனால் திவாலாகியும் இருக்கின்றன. அதனால், நானறிந்த வரையில் தடைபடா வர்த்தக பாதுகாப்பு திட்டமிடுதல் (Business Continuity Planning) -- இது என் மொழி பெயர்ப்பு (சரியான மொழிபெயர்ப்பு தெரிந்தால் சொல்லுங்கள்). இந்த திட்டமிடுதல், ஒரு நிறுவனம் எந்த சூழ்நிலையிலும் தன் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த திட்டமிடுதலாகும். அது குண்டு வெடிப்பாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, வெள்ளமாக இருந்தாலும் சரி எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.

தற்போது, இந்த திட்டமிடுதலின் பல்வேறு அங்கங்களை தெரிவித்து விட்டு, பின்பு ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.

1. தொடர் வர்த்தக திட்டம் பற்றிய திட்டம்
2. இடர்ப்பாடு ஆய்வு ((Risk Assessment)
3. வர்த்தக தாக்க ஆய்வு (Business Impact Analysis)
4. வர்த்தக தொடர்ச்சி உத்திகள் உருவாக்கம் மற்றும் செயலாக்கம் (Developing and implementing business continuity strategies )
5. நெருக்கடி கால பரிமாற்ற திட்டம் மற்றும் செயலாக்கம் (Planning and conducting crisis communications )
6. புற, அரசாங்க மற்றும் நிருவனங்களின் ஒத்துழைப்பு திட்டம் மற்றும் செயலாக்கம் ( Planning and implementing coordination with external agencies )
7. அவசர கால நடவடிக்கைகளும், நெருக்கடி கால நிர்வாக செயல்முறைகளும் (Developing emergency response and crisis management procedures )
8. தொடர் வர்த்தக திட்ட தயாரிப்பு மற்றும் செயலாக்கம் (Developing and Implementing Business Continuity Plans)

மீண்டும் எழுதுகிறேன்.......

2 மறுமொழிகள்:

Blogger abiramam மொழிந்தது...

Hello, Its really a good post. I am also planning to study about BCP. If you have any details about BCP certificate course, please do let me know. Again its a good one. Keep it up.

 
Blogger Siththan மொழிந்தது...

நன்றி அபிராமம். இந்த இரண்டு இணைய தளங்களிலும் சென்று பாருங்கள்.

www.thebci.org

www.drii.org

நேரம் கிடைக்கும் போது மீண்டும் எழுதுகிறேன்.

 

Post a Comment

<< முகப்பு